RSS

ஐன்ஸ்டைனை சந்தித்தேன் !!

Mahesh Filed Under: நெனப்புகள்: , , , , , , , ,
ஸ்விஸ் நாடாளுமன்றம் - வெளிய செஸ் விளையாட்டு

ஜெனீவா. போன ஞாயித்துக்கிழமை. எப்பாடு பட்டாவது சீக்கிரம் எந்திரிச்சு எங்கயாவது போய் ஒரு ஃபோட்டோ செஷன் போட்டுடணும்னு தீர்மானித்தோட தூங்கியுங் கூட காலைல எழுந்திருக்கும்போது மணி 8. இதுல வேற பகல் நேரத்தை மிச்சம் பண்றோம்னு அதிகாலை 2 மணிக்கு 3 மணின்னு கடிகாரத்தை திருப்பி வெக்கச் சொன்னது மறந்து போச்சு. ஹோட்டல் ரூம் ஜன்னல் வழியாப் பாத்தா மழை இப்பவோ அப்பவோன்னு வர மாதிரியே இருந்துது. "இவிங்க எப்பவுமே இப்பிடித்தான்"ன்னு நினைச்சுக்கிட்டு பெர்ன் (Berne) வரை போய் வரலாம்னு முடிவு பண்ணினேன். அப்பிடி இப்பிடி கிளம்பும்போது மணி 9:30 ஆயிடுச்சு. 10:15 ட்ரெய்னைப் புடிச்சு 12 மணிக்கு போய்ச் சேந்தேன்.





பெர்ன் ஸ்விஸ்ஸோட தலைநகரம். தம்மாத்தூண்டு ஊரு. மொத்த ஊரையும் நடந்தே சுத்தி வந்துடலாம். யுனெஸ்கோ இதை Heritage Cityன்னு சொல்லி பாதுகாக்குது. ரொம்ப அழகான ஊர். "ஆர்" நதி ஒரு பெரிய "U" மாதிரி வளைஞ்சு ஓடுது. நதியோட "U" டெல்டால பெர்ன். ஸ்விஸ் பாராளுமன்றம் இங்கதான் இருக்கு. மொத்தமா மூணே மூணு தெரு. குறுக்க இணைப்புச் சாலைகள். இதுல நிமிஷத்துக்கு ஒரு ட்ராம். அட்டகாசம் தாங்கலை. சாலைகள்ள அங்கங்க செயற்கை நீறூற்றுக. நல்ல கலை நயமிக்க சிலைகளோட.




:

:

:

:

:

பிரதான சாலைக்கு நடுவுல Zytglogge பெரிய்ய்ய்ய்ய சிக்கலான 24 மணி நேர கடிகார கோபுரம். மணி நிமிஷம் மட்டுமில்லாம சூரியன், சந்திரன் இருக்கும் திசை, மாசம், நாள், 12 ராசிகள்ல சூரியனும் சந்திரனும் இருக்கற ராசி, தேய்பிறையா வளர்பிறையா... எல்லாம் காமிக்குது. இவ்வளவு சிக்கலான இயந்திர கடிகாரத்தை 12வது நூற்றாண்டுலயே செஞ்சு அது இன்னும் ஓடிக்கிட்டும் இருக்கறது ஆச்சரியமா இருக்கு.



:

:

:

:

:

ஒரு 3 மணி நேரம் ஊரெல்லாம் சுத்தி முடிச்சுட்டு முக்கியமான இடத்துக்கு போனேன். நம்ம ஐன்ஸ்டைன் ம்யூசியம். இயற்பியல் / வானவியல் ஆர்வலர்களோட கடவுள் ஐன்ஸ்டைன். பிறப்பால யூதர். மேல்படிப்புக்காக ஸுரிக் வந்து அப்பறம் பெர்ன்ல செட்டில் ஆயிட்டாரு. பெர்ன்லதான் உலகப் புகழ் பெற்ற "சார்பியல் தத்துவம் (Theory of Relativity)" வெளியிட்டாரு.

ஒளி துகள்களால் ஆனதுன்னு சொல்லி ஃபோட்டானை அறிமுகப்படுத்திய பிறகு க்வாண்டம் இயற்பியல் பிறந்தது. சார்பியல் தத்துவத்தை எல்லாம் விளக்கறதுக்கு எனக்கு அறிவு கம்மி. அது ரொம்பவே ஒரு சிக்கலான தியரி. சுருக்கமா சொன்னா ஒளியின் வேகம் மாறவே மாறாதது. அதுக்கு பதிலா காலம், தூரம் (time & distance) இது ரெண்டும் கூட குறைஞ்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். ஒளிவேகத்துல பிரயாணம் பண்ணினா தூரம் அதிகமாக அதிகமாக காலம் குறையும். ஆனா அதுவே பூமி மட்டத்துல நேர் எதிர். நாம அதிகம் பயணம் பண்ணினா அதிக நேரம் ஆகும்.

இந்த தத்துவத்தை ஒரு சாதாரண பந்தோட இயக்கத்தை வெச்சு ஒரு ஒலி-ஒளி படமா விளக்கியிருந்தது மூணு நாலு தடவை பாத்ததும் எனக்கே புரிஞ்சுடுச்சு. அப்பறம், ஈர்ப்பு விசையால ஒளி வளையும்னு கண்டுபுடிச்சு, அதை ஒரு சூரிய கிரகணத்தன்னிக்கு நிருப்பிச்சுருக்காரு. அந்த அடிப்படைல மெர்குரி கிரகத்தோட precession (இதுக்கு தமிழ் என்னங்க?) 100 வருஷத்துல 42.98 ஆர்க்செகண்ட் (1/360 பாகை) மாறுபடுதுன்னு கணக்கு போட்டு சொன்னாராம். நரி வலம் போனாலும் இடம் போனாலும் நம்மளைக் கடிக்காமப் போனா சரின்னு இருக்கற என்னை மாதிரி ஆளுக்கு இதோட முக்கியத்துவமோ விளைவோ புரியல. எல்லாத்தையும் விட பருப்பொருளுக்கும் ஆற்றலுக்கும் இடையே உள்ள தொடர்பை (e=mc2) கண்டுபுடிச்சு வெளியிட்டது பெர்ன்லதான்.

காலமும் தூரமும் பார்வையாளனோட இருப்பைப் பொறுத்து மாறுபடும்னு சொன்னதை எதிர்த்தவங்க எத்தனையோ பேர். ஆனாலும் அதை மறுக்க முடியாம அதுதான் இன்னிய க்வாண்டம் இயற்பியலோட அடிப்படையா இருக்கு. காலப்பரவல் (Time Dilation), தூரக்குறைவு (Distance Contraction) இது ரெண்டும் கற்பனை பண்ணிப் பார்க்க கொஞ்சம் கஷ்டமா இருக்கும். ஆனா அறிவியல் உலகத்தையே புரட்டிப் போட்ட தத்துவங்கள்.

அவரோட பிறப்பு, படிப்பு, வாழ்க்கை எல்லாம் விளக்கமா இருக்கு ம்யூசியத்துல. பல காதல்கள், மனைவிகள், காணாமப் போன முதல் பெண்குழந்தை உட்பட. சின்ன வயசுல தலைவர் என்ன அழகா ஹேண்ட்சமா இருக்காரு. பொண்ணுக சுத்தி சுத்தி வந்துருக்கும்.

வாயப் பொளந்துக்கிட்டு ம்யூசியத்துல மட்டுமே சுத்தமா 4 மணி நேரம் செலவழிச்சேன். என்னோட ரொம்ப நாள் ஆசை நிறைவேறினதுல ரொம்ப சந்தோஷத்தோட திரும்ப பார்லிமெண்ட் பக்கம் வந்து கொஞ்சம் ஃபோட்டோக்கள் எடுத்துட்டு மறுபடி ட்ரெய்ன் புடிச்சு 10 மணி சுமாருக்கு ஜெனீவா திரும்பினேன். மறக்க முடியாத நாள்.

வால் : எந்தக்காலத்துலயோ யாரொ ஒரு ஆளு இந்த ஊர்ல ஒரு கரடிய கொன்னுட்டாராம். அதுனாலயே இந்த ஊருக்கு பேரு "பெர்ன்" (ஜெர்மன்ல கரடின்னு அர்த்தம் வர மாதிரி) ஊருக்குள்ள எங்க பாத்தாலும் கரடி சிலை, படம், பொம்மை........ ஊர் நடுவுல ஒரு பெரிய குழி வெட்டி சின்னச் சின்ன குகைக, மரமெல்லாம் வெச்சு ரெண்டு கரடிகளையும் விட்டுருக்காங்க. அது ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்.

>



வேலைப்பளு அதிகமா இருந்ததால கடைய 1 வாரமா திறக்க முடியல. (திறந்திருந்தா மட்டும் கூட்டம் அலைமோதுதாக்கும்??? ) இனிமே இப்பிடித்தான் இருக்கும்னு நினைக்கிறேன். ப்ராஜெக்ட் முடிவை நெருங்கிக்கிட்டுருக்கு. முடிஞ்சபோது எழுதறேன். (நீயெல்லாம் அடிக்கடி எழுதலைன்னு யார் அழுதா?? எதுக்கு இந்த பில்டப்பெல்லாம் ?ம்ம்ம்...?? )

நான் எடுத்ததுல எனக்குப் புடிச்ச ஃபோட்டோ ஹி.. ஹி..



ஜெனீவா தொடர்பான எனது பிற இடுகைகள்:

ஜெனீவா !!

edit post

40 Responses to "ஐன்ஸ்டைனை சந்தித்தேன் !!"

  1. இராகவன் நைஜிரியா Says:
  2. இந்த தத்துவங்கள் எல்லாம் நமக்கு புரிவதில்லைங்க.

    அருமையா விளக்கியிருக்கீங்க.

    படங்கள் எல்லாம் ரொம்ப அருமை.

    கடைசிப் படம் நிஜமாவே ரொம்ப சூப்பர்ங்க.. (உங்களுக்கு பிடிச்சது எனக்கும் பிடிச்சதுங்க... சேம் சேம் ப்ளட் B+)
  3. இராகவன் நைஜிரியா Says:
  4. ஐ .. நான் தான் முதல் பின்னூட்டம்
  5. Mahesh Says:
  6. வாங்க ராகவன் சார்.... ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணோமே? முன்ன மாதிரி அடிக்கடி இடுகைகளும் போடறதில்லை....
  7. பரிசல்காரன் Says:
  8. பயணம் குறித்த உங்கள் எழுத்து எப்போதும் சிறப்பாக இருக்கும். இதில் கொஞ்சம் அதிகமாகவே..
  9. குடுகுடுப்பை Says:
  10. படங்கள் அருமை, சீக்கிரம் ஐரோப்பா வரத்தூண்டுகிறது.
  11. Mahesh Says:
  12. அட... பரிசல்... என்ன இந்த நேரத்துல எல்லாம் பின்னூட்டம் போடறீங்க !!!!

    நன்றி கு.கு.... ஒரு ட்ரிப் போடுங்க..
  13. குடுகுடுப்பை Says:
  14. என்னை சந்திச்சத பதிவா போட்டிருக்கீங்க நன்றி
  15. பழமைபேசி Says:
  16. இப்போ போய்ட்டு அப்புறம்...
  17. அது சரி Says:
  18. //
    சுருக்கமா சொன்னா ஒளியின் வேகம் மாறவே மாறாதது. அதுக்கு பதிலா காலம், தூரம் (time & space) இது ரெண்டும் கூட் குறைஞ்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். ஒளிவேகத்துல பிரயாணம் பண்ணினா தூரம் அதிகமாக அதிகமாக காலம் குறையும். ஆனா அதுவே பூமி மட்டத்துல நேர் எதிர். நாம அதிகம் பயணம் பண்ணினா அதிக நேரம் ஆகும்.
    //

    தலைவா...விசு விட்டுட்டு போன எடம் ஒங்களுக்கு தான்....ரொம்ப தெளிவா கொழப்புறீங்களே :0))
  19. அது சரி Says:
  20. //
    குடுகுடுப்பை said...
    என்னை சந்திச்சத பதிவா போட்டிருக்கீங்க நன்றி
    April 7, 2009 3:45 AM
    //

    ஏ அய்யா...தப்பு பண்ணிப்புட்டேன்...குடுகுடுப்பைக்காரரு நம்ம வயசுக்காரருன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்...அவரு வயசு ஒரு எரநூறு இருக்கும் போலருக்கே!
  21. நசரேயன் Says:
  22. அடுத்து ஐரோப்பா தான்
  23. ஸ்வாமி ஓம்கார் Says:
  24. உங்கள் பயண கட்டுரை அருமை.
    Zytglogge என்னை மிகவும் கவர்ந்தது.

    ஐன்ஸ்டின் பற்றிய விளக்கமும் எளிமையான சார்ப்பியலும் நன்றாக இருக்கிறது.

    E=mc2 பற்றி விரிவா ஒரு பதிவு போடுவீர்களா?
  25. Xavier Says:
  26. ரொம்ப அருமையாக‌ இருக்கு மகேஷ். அடுத்த கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அதற்கான காரணம் உங்களுக்கு தெரிந்து இருக்கும்.
  27. Mahesh Says:
  28. நன்றி அதுசரி.... அப்பாடி... கொழம்பிட்டிங்க இல்ல? எங்க புரிஞ்சுடுச்சோன்னு பயந்தேன் :))

    நன்றி கு.கு.... சே... உங்கபேரை மறைச்சு எழுதினாலும் கண்டுபுடிச்சுடறீங்களே...:)

    நன்றி மணியாரே...சீக்கிரம் வாங்க..

    நன்றி நசரேயன்.. ம்ம்.. போடுங்க போடுங்க... பாக்க வேண்டிய இடம்.

    நன்றி ஸ்வாமி ஓம்கார்... அய்யய்யோ வம்புல மாட்டி விடறீங்களே? முயற்சி செய்யறேன் :)

    நன்றி சேவியர்... ஆஹா... கால்வலி தீரட்டும்.. போட்டுடலாம். :))))
  29. Krishna Prabhu Says:
  30. உங்களுடைய பயணக் கட்டுரை அருமை. பார்க்க வேண்டிய இடம்... /--ஐன்ஸ்டின் காதலுக்காக தனது நோபல் பணமுடிப்பு அனைத்தையும் முதல் மனைவிக்கு ஒப்பந்தப்படி கொடுத்துவிட்டதாக அ.முத்துலிங்கம் கட்டுரையில் சமீபத்தில் படித்த ஞாபகம்.--/

    வலைச்சரத்தின் மூலமாக உங்கள் பதிவை வாசிக்க முடிந்தமைக்கு மகிழ்ச்சி.
  31. இராகவன் நைஜிரியா Says:
  32. // Mahesh said...

    வாங்க ராகவன் சார்.... ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணோமே? முன்ன மாதிரி அடிக்கடி இடுகைகளும் போடறதில்லை....//

    நன்றி மகேஷ். கொஞ்ச நாளாக அலுவலகத்தில் வேலை அதிகம். அதனால எதைப் பற்றி இடுகை போடுவது என்று புரியவே இல்லை. அதனால்தான் இந்த இடைவெளி ஏற்படுகின்றது.

    பதிவில் இடுகை மெதுவா போடலாம், யாரும் அடிக்க போவதில்லை என்ற மெத்தனமும் காரணம்.
  33. வெங்கிராஜா Says:
  34. அருமையான பதிவு. பயணக்கட்டுரைகளை விரும்பிப் படிப்பவன் நான். என்னை பெர்ன் வரை கூட்டிச்சென்றதற்கு நன்றி. குறிப்பா அந்த கடைசி நிழற்படம் சூப்பர்!
  35. உருப்புடாதது_அணிமா Says:
  36. படங்கள் ரொம்ப அருமை.
  37. உருப்புடாதது_அணிமா Says:
  38. Ulagam sutrum Vaaliparrrrrrrrrrrrr,....


    ( avvvvvvvv)
  39. உருப்புடாதது_அணிமா Says:
  40. பயண கட்டுரை அருமை.
  41. ராஜ நடராஜன் Says:
  42. இப்பத்தான் சார்ல்ஸ் டிக்கன்ஸின் வீட்டப் பார்த்துட்டு வந்தேன்.ஐன்ஸ்டீன் கோவிச்சுக்காவாரோன்னு நினச்சு அவரையும் ஒரு எட்டுப் பார்த்துட்டுப் போலாமேன்னு வந்தேன்.
  43. ராஜ நடராஜன் Says:
  44. இம்புட்டு சுத்திக் காட்டிட்டு ஸ்விஸ் பேங்க்,பின்ன சாவி....
  45. ராஜ நடராஜன் Says:
  46. //என்னோட ரொம்ப நாள் ஆசை நிறைவேறினதுல ரொம்ப சந்தோஷத்தோட திரும்ப பார்லிமெண்ட் பக்கம் வந்து கொஞ்சம் ஃபோட்டோக்கள் எடுத்துட்டு மறுபடி ட்ரெய்ன் புடிச்சு 10 மணி சுமாருக்கு ஜெனீவா திரும்பினேன்.//

    மறுபடியும் உத்து உத்துப் படிச்சிகிட்டே வந்தேன்.ஸ்விஸ் பேங்க் மாட்டுதான்னு.ம்ஹும்.(எப்படித்தான் பிழைக்கப் போறீங்களோ:))
  47. ராஜ நடராஜன் Says:
  48. //வேலைப்பளு அதிகமா இருந்ததால கடைய 1 வாரமா திறக்க முடியல. (திறந்திருந்தா மட்டும் கூட்டம் அலைமோதுதாக்கும்??? )//

    கஸ்டமர் வந்தாலும் வராட்டியும் கடைய திறந்து காத்து வாங்க வெச்சுடணும்:)
  49. பழமைபேசி Says:
  50. அனுபவப் பகிர்தலுக்கு நன்றி!

    //இராகவன் நைஜிரியா said...
    // Mahesh said...

    வாங்க ராகவன் சார்.... ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணோமே? முன்ன மாதிரி அடிக்கடி இடுகைகளும் போடறதில்லை....//

    நன்றி மகேஷ். கொஞ்ச நாளாக அலுவலகத்தில் வேலை அதிகம். அதனால எதைப் பற்றி இடுகை போடுவது என்று புரியவே இல்லை. அதனால்தான் இந்த இடைவெளி ஏற்படுகின்றது.

    பதிவில் இடுகை மெதுவா போடலாம், யாரும் அடிக்க போவதில்லை என்ற மெத்தனமும் காரணம்.//

    நீங்க ரெண்டு பேரும் வெகு தெளிவா இருக்கீங்க.... நாந்தான் இன்னும் பதிவுக்கும், இடுகைக்கும் இடையில கிடந்து அல்லாடுறேன்.... அவ்வ்வ்...
  51. ராஜ நடராஜன் Says:
  52. பயனுள்ள பயணக் கட்டுரை.பதிவுக்கு நன்றி!
  53. வடுவூர் குமார் Says:
  54. I like that Clock....must enlarge and see. Fantastic.
  55. Mahesh Says:
  56. மிக்க நன்றி ராகவன் சார்... உங்களுக்கு என்ன இடுகை போடறதுன்னு தெரியலயா?? என்ன அழுதறதுன்னு தெரியலயேன்னே ஒரு இடுகை போட்டீங்களே !!
    :))))))))))))))))

    நன்றி வெங்கிராஜா....

    நன்றி அணிமா அண்ணே... என்னது உங்க கடை இருக்கா இல்லயா?
  57. Mahesh Says:
  58. நன்றி ராஜ நடராஜன்... சாவிதானே? சோப்புல அச்சு எடுத்தாச்சு..

    வாங்க மணியாரே.... நீங்க தெளிவா இல்லைன்னு சொன்னா நம்ப முடியலயே????

    நன்றி வடுவூர்குமார்... பாருங்க பாருங்க... பாத்து நான் எந்த நாள், எத்தனை மணிக்கு அங்க இருந்தேன்னு சொல்லுங்க பாக்கலாம்....
  59. VIKNESHWARAN Says:
  60. wow... very nice....
  61. எம்.எம்.அப்துல்லா Says:
  62. ஒற்றை வார்த்தையில் சொல்லவா??

    அழகு :)

    //E=mc2 பற்றி விரிவா ஒரு பதிவு போடுவீர்களா //

    நா எழுதவா சாமி??
  63. Mahesh Says:
  64. நன்றி விக்கி....

    நன்றி அப்துல்லாண்ணே....
  65. ஆதிமூலகிருஷ்ணன் Says:
  66. அப்புறம் பருப்பொருள்னா என்னா? ஏதாவது பெரிய பொருளா.? ஒண்ணுமே சொல்லாம விட்டுட்டீங்களே..
  67. ஆதிமூலகிருஷ்ணன் Says:
  68. எவ்வளவு விஷயங்கள்.. என்ன மாதிரி அனுபவம்.. வாவ்.! பொறாமையைத் தூண்டுகிறீர்கள் மகேஷ்..
  69. Mahesh Says:
  70. நன்றி ஆதி.... பருப்பொருள்னா "மேட்டர்" (வேற மேட்டர் இல்ல... இது matter.. :))))))))))))
  71. குசும்பன் Says:
  72. //பெர்ன் ஸ்விஸ்ஸோட தலைநகரம். தம்மாத்தூண்டு ஊரு. மொத்த ஊரையும் நடந்தே சுத்தி வந்துடலாம்.//

    ஆனா நடக்கும் பொழுது மணிக்கு 200 கிலோ மீட்டர் ஸ்பீடில் நடக்கனும் என்று சொல்ல மறந்துட்டீங்க போல:))

    கடைசி போட்டோ செம கலக்கல்!
  73. குசும்பன் Says:
  74. //உலகப் புகழ் பெற்ற "சார்பியல் தத்துவம் (Theory of Relativity)" வெளியிட்டாரு//

    இந்த ஒத்த துருவங்கள் ஒன்னை ஒன்னு எதிர்க்கும், எதிர் எதிர் துருவங்க ஒன்னை ஒன்னு ஈர்க்கும் என்ற தத்துவமா?
  75. Mahesh Says:
  76. நன்றி குசும்பன்.....

    //இந்த ஒத்த துருவங்கள் ஒன்னை ஒன்னு எதிர்க்கும், எதிர் எதிர் துருவங்க ஒன்னை ஒன்னு ஈர்க்கும் என்ற தத்துவமா?//

    ரொம்பத்தான் குசும்பு உங்களுக்கு :))))))))
  77. கிரி Says:
  78. மகேஷ் நல்லா விரிவா கூறி இருக்கீங்க..
  79. www.bogy.in Says:
  80. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

Post a Comment